Home About Services Testimonials Contact Donate
இமயம் பற்றி

எங்களைப் பற்றி

Masilamani Founder

மாசிலாமணி

நிறுவனர் & மேலாண்மை இயக்குனர்

எங்கள் கதை

ஒரு மனிதர், ஒரு லட்சியம், ஒரு புரட்சி

இன்றைய அவசர கால உலகில் சுயநலம் மிக்க மனிதர்கள் கூட்டம் கருணை என்பதை மறந்து சுயநலம் நோக்கி செயல்பட்டு வருகிறார்கள். பக்கத்து வீட்டுக்காரனுக்கு ஒரு பிரச்சனை என்றாலும் கூட இன்று பலபேர் என்னவென்று எட்டிப் பார்க்கவே மறுக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், திருப்பூர் கோட்டைக்காடு பகுதியை சேர்ந்த மாசிலாமணி அவர்கள் ஏழை எளிய மக்களின் வாழ்விற்காக தன்னையே அர்ப்பணித்தவர். கல்வியின் அவசியத்தை அறிந்த பிஏ பட்டதாரியான இவர், கல்லாத பலருக்கு வாழ்க்கை துயரத்திற்கும் துன்பத்திற்கு மாறாது கண்டார்.

ஏழை குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை தனது லட்சியமாக ஏற்றுக் கொண்டார். அதன் பலனாக இன்று நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு கல்வி கற்க உதவி புரிந்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளாக சிறுவர் சிறுமிகளுக்கு இலவச சேவை ஈடுபட்டு, வேலைக்கு செல்லும் குழந்தை தொழிலாளர்களை கண்டறிந்து அவர்களை படிக்க வைக்கும் உன்னதமான சேவையை தொடர்ந்து செய்து வருகிறார்.

17+ Years of Service
1000+ Children Benefited
500+ Computer Trainees
Daily Free Lunch
எங்கள் இலக்கு

குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பு & கல்வி விழிப்புணர்வு

"பள்ளிக்கூடம் தொழில் கூடம் அல்ல" - இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்படுகிறோம்.

கள நிலவரம்

வறுமை, போதிய குடும்ப வருமானம் இல்லாமை, மோசமான பள்ளி சூழ்நிலை போன்ற காரணங்களால் குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பாதையில் இருக்கிறார்கள். ஆராய்ந்து பார்க்கும்போது குழந்தைகள் ஈடுபடும் தொழில்கள்:

  • வேளாண்மை & தோட்டப்பயிர்
  • சுரங்கத் தொழில் & கல்குவாரி
  • பீடி சுருட்டுதல்
  • கண்ணாடி & தயாரிப்பு
  • கைத்தறி & நெசவு
  • தீப்பொட்டி & பட்டாசு
  • காகிதம் & பிளாஸ்டிக்
  • கட்டுமான தொழில்

இலவச கணினி பயிற்சி

ஏழை மற்றும் தாழ்த்தப்பட்ட மாணவ மாணவிகளுக்கும் அனைவருக்கும் இலவச கணினி பயிற்சி வழங்கி வருகிறோம். (Java, C, C++, Corel Draw, Visual Communication).

விழிப்புணர்வு முயற்சிகள்

கல்வி விழிப்புணர்வு, கொத்தடிமை விழிப்புணர்வு, குறும்படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

மாலை நேர பாடசாலை

முதியோர் மாலை நேர பாடசாலை மற்றும் குழந்தைகளுக்கு காலை இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் கராத்தே.

மதிய உணவு சேவை

இலவச மதிய உணவு சேவை திட்டம்

"மனித நேயம் முயற்சி இலவசம்". நம்மிடையே உள்ள மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர், பார்வையற்றவர்கள் அவர்கள் இருக்கும் இடத்திற்கு தேடிச்சென்று இலவசமாக மதிய உணவு மற்றும் குடிநீரும் வழங்கும் மனிதநேய நிகழ்ச்சி.

திட்டத் துவக்க விழா சிறப்பு விருந்தினர்:

உயர்திரு ஜே சரவணகுமார் ஐஏஎஸ் அவர்கள் (உட்கோட்ட நடுவர் மற்றும் சார் ஆட்சியர்)

இத்திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பலனடைவார்கள். இத்திட்டத்தை தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர் மாசிலாமணி அவர்கள்.

Food Distribution